சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிணைந்த வடிவம். இந்த சக்தியை நினைத்து செய்யப்படுவதுதான் சண்டி ஹோமம். எவரொருவர் சண்டி ஹோமத்தைச் செய்தாலோ அல்லது சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டாலோ சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகளில்
இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது ஐதீகம்.